கொரோனா தொற்றுநோய்க்கால ஊரடங்குவேளைகளில் வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட குடும்பங்களிற்கான அத்தியாவசிய உணவுப்பொருட்களைத் திரட்டுவதற்கும் விநியோகித்தலுக்குமான வலையமைப்பு
இறுதிக் கணக்கறிக்கை
- கொரோனா தொற்றுநோய்க்கால ஊரடங்குவேளைகளில் வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட குடும்பங்களிற்கான அத்தியாவசிய உணவுப்பொருட்களைத் திரட்டி விநியோகிப்பது என்ற நோக்கத்துடன் இந்த வலையமைப்பு உருவாக்கப்பட்டதன் பின்னர் (மார்ச் 30, 2020 முதல் ஜூன் 9, 2020 வரை) கிடைக்கப்பெற்ற இலங்கை ரூபாய் 2,645,528 (இருபத்தியாறு லட்சத்து அறுபத்து ஆறாயிரத்து ஐநூற்று இருபத்தி எட்டு) பணத்தில் இலங்கை ரூபாய் 2,644,555 (இருபத்தியாறு லட்சத்து நாற்பத்து நான்காயிரத்து நானூற்று ஐம்பத்தி ஐந்து) பெறுமதியான உதவிகள் 1682 வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ள, ஐந்து அங்கத்தவர்களுக்கு உட்பட்ட குடும்பங்களுக்கு தலா ஆயிரத்து எண்ணூறு ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பொதிகளும் ஐந்திற்கு மேற்பட்ட அங்கத்தவர்களைக் கொண்ட குடும்பங்களுக்கு தலா இரண்டாயிரத்து இருநூறு ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டன.
விநியோகம் செய்யப்பட்ட உணவுப் பொருட்களின் விலை – ரூபாய் 1,197,365.00
நிதியாக வழங்கப்பட்ட பணம் – 1,328,200.00
பொதிசெய்யும் செலவு – 25,465.00
வாகன வாடகை, எரிபொருட்ள், ஒட்டுனருக்கான சம்பளம் – 60,100.00
உணவு, சிற்றுண்டி, தேநீர் – 24,735
தொடர்பாடல் செலவு – 1,990.00
ஏனைய செலவுகள் – 6,700
இவ்வுதவிகள் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 795 குடும்பங்களுக்கும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 837 குடும்பங்களுக்கும் மலையகத்தைச் சேர்ந்த 50 குடும்பங்களுக்கும் வழங்கப்பட்டன. இவர்கள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, பதுளை, நுவரெலியா, மாத்தறை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாவர்.
சில பிராந்தியங்களில் நிதி மட்டுப்பாட்டினாலும் தேவைகருதியும் அனைத்துக் குடும்பங்களுக்கும் ஒரேயளவான பொதிகள் வழங்கப்பட்டன. கிழக்கில் பழங்குடிச் சமூகங்கள் மத்தியிலும் மிகவும் பின்தங்கிய கிராமங்களிலும் வழங்கிய உதவிகள் அனேகருக்கான தேவைகளாக இருந்தபோதும் ஒரேவிதமானதாக பொதிகளை வழங்கியிருந்தோம்.
பொதுவான பொதியிடலின் அளவு
o ஐந்து அங்கத்தவர்களுக்கு உட்பட்டது
• அரிசி – 5kg
• மா – 5kg
• பருப்பு – 1kg
• சோயாமீற் – 2 பக்கெற்றுகள்
• சீனி – 2kg
• தேயிலை – 200g
o ஐந்து அங்கத்தவர்களுக்கு மேற்பட்டது
• அரிசி – 10kg
• மா – 5kg
• பருப்பு – 1kg
• சோயாமீற் – 4 பக்கெற்றுகள்
• சீனி – 2.5kg
• தேயிலை – 200g
எமது வலையமைப்பிற்குக் கிடைத்த பெருமளவான கோரிக்கைகளை உறுதிப்படுத்திய பின் வழங்கியிருக்கிறோம். பல்வேறு சுயாதீன அமைப்புகளும் இளைஞர் குழுக்களும் இந்த இடர்க்காலத்தில் மக்கள் பட்ட அல்லலை உடனடி நிவாரணப்பணிகளின் மூலம் பெருமளவு தீர்த்திருக்கிறார்கள். இந்தக் கூட்டுழைப்பானது எமக்குப் பல்வேறு அனுபவங்களை வழங்கியிருக்கிறது. இணைந்து பயணித்த, களப்பணியாற்றிய, நிதிப்பங்களிப்பாற்றிய அனைவருக்கும் நன்றிகள்.
வலையமைப்பு ஒருங்கிணைப்பு
விதை குழுமம்
பசுமைச் சுவடுகள்
சிறகுகள் அமையம்
யாழ்ப்பாண சங்கம்
அக்கினிச் சிறகுகள்
மனிதம்
பப்பீட்டர் ஸ்டூடியோஸ்
மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள்