vithaikulumam.com
செயற்பாடுகள்

தொன்ம யாத்திரை – 6 இற்கான அழைப்பு

இலங்கையில் தமிழ், சிங்கள மக்கள் வழிபடக்கூடிய நாட்டார் பெண் தெய்வமான கண்ணகி, கண்ணகை, பத்தினி என்ற வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படும் கண்ணகை தொடர்பில் வெவ்வேறு பண்பாட்டு தொன்மங்கள், மரபுகள், சடங்குகள், வரலாற்றுச் செய்திகள் தமிழ், சிங்கள சமூகங்களிடையே நிலவிவருகின்றன. அத்துடன் இந்தக் கண்ணகை மரபு இவ்விரு சமூகங்களின் நாட்டார் பண்பாட்டு மரபுரிமைகளாகக் கருதப்படக்கூடிய ஆழமான சமூக, பண்பாட்டுக் கூறுகளையும் கொண்டிருக்கின்றது. இவ்வகையில் ஈழத்திற்கு கண்ணகை வழிபாட்டு மரபு எடுத்துவரப்பட்ட முதல் இடமாக தொன்மக்கதைகளாலும், வரலாற்றுச்செய்திகளாலும் குறிப்பிடப்படும் யாழ்ப்பாணம்-வலிகாமம் பிரதேசத்தில் உள்ள ‘அங்கணாமக்கடவை’ என்ற இடத்தை தொன்மயாத்திரைக்காகத் தெரிவு செய்திருக்கிறோம்.

கண்ணகை வழிபாட்டு மரபையும் அதனோடு இணைந்த பண்பாட்டுக்கூறுகளையும் அறியவும், ஆவணப்படுத்தவும் அதன் மரபுரிமைத்தன்மையினை பகிர்ந்து கொள்வதையும் நோக்கமாகக் கொண்ட இந்த நிகழ்வு செப்ரம்பர் 27, 2020 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை இடம்பெறும்.

Related posts

மாற்றுக் குரல்

vithai

வாசிப்பும் உரையாடலும் : நிகழ்வு 03

vithai

உண்ணாவிரதப்போராட்டத்தின் முடிவு

vithai

காட்டுப்புலம் ஒரு சமூக உரையாடல்- 4

vithai

கேப்பாபுலவு – நிலமீட்புக்கான மக்கள் போராட்டத்தின்கதை –பிரசுரம் வெளியீடு

vithai

கிட்டிப்புள் விளையாடின கதை – நிலத்தில் விளையாடுதல் பற்றிய குறிப்பு

vithai

Leave a Comment