vithaikulumam.com
அறிக்கைகள் சமகாலகுறிப்புகள்

கபன் சீலைப் போராட்டம்

உலகெங்கும் இருக்கின்ற மக்களிடையே இறந்தோரது உடல்களை புதைப்பது, எரிப்பது உட்பட பல்வேறு சடங்குகளும் வழமைகளும் இருந்துவருகின்றன. இலங்கையிலும் இப்படியான வெவ்வேறு சடங்குகளும் வழமைகளும் நடைமுறையில் உள்ளன. இப்படி இருக்கையில், கோவிட் 19 இனைக் காரணங்காட்டி இலங்கையில் இறந்தோரது உடல்களைப் புதைப்பதனை இலங்கை அரசு தடை செய்திருப்பதானது அடிப்படை உரிமைகளை மீறுகின்ற செயலாகும்.

கோவிட் 19 தொற்றினைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளில் ஒன்றாக இலங்கை அரசு தனது ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்றது; ஆயினும் அறிவியல் ரீதியாக எந்தவிதமான ஆதாரமும் இல்லாத ஒரு விடயத்தை பூதாகரமானதாக்கிச் செய்யப்படுகின்ற இந்த நடவடிக்கையை ஒடுக்கப்படும் இனத்தவர்களின் அடிப்படை உரிமையை மறுப்பதாகவும் அதன் மூலமாக மதவாதத்தையும் பெரும்பான்மைவாதத்தையும் வலுப்படுத்துவதாகவுமே கருதமுடிகின்றது.

அதன் அடிப்படையில் இறந்தோரின் உடல்களை புதைப்பது என்கிற சடங்கியல் உரிமைகள் மறுக்கப்படுகின்றவர்களின் உரிமைக்கான ஜனநாயக ரீதியான போராட்டங்களுக்கு விதை குழுமம் தனது ஆதரவினைத் தெரிவிப்பதுடன் ஒடுக்கப்படும் இனத்தவர்களுக்கு மறுக்கப்படும் இந்த உரிமைகளுக்காக ஒடுக்கப்படும் இனத்தவர்கள் அனைவரும் உணர்வுத்தோழமையுடன் குரல் கொடுக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றது.

தோழமையுடன்
விதை குழுமம்

ஒளிப்படம் : சிராஜ் மஷுரின் முகநூல் பக்கத்திலிருந்து

Related posts

நானும் கூட என்னும் பெண்ணியப் பகிர்வுக் குறியீட்டுச் செயற்பாட்டியக்கம் #MeToo

vithai

மூளாய் இராவணேசுவரர் குறித்து சில வார்த்தைகள்

vithai

பாற்புதுமையினர் பற்றிய அறிதலும் சமூக ஏற்பிற்கான பயணமும்

vithai

சுன்னாகம் நிலத்தடி நீர் மாசு தொடர்பான ஊடக அறிக்கை வெளியீடு

vithai

சுயமரியாதையை இழந்துவிட்ட யாழ் பல்கலைக்கழகம்

vithai

வாய்ப்பாட்டு மட்டை

vithai

Leave a Comment