விதை குழுமம் ஒருங்கிணைத்த தொ. பரமசிவன் : அறிதலும் பகிர்தலும் நிகழ்வு ஜனவரி 17, 2021 இலங்கை நேரப்படி பிற்பகல் இரவு 8 மணி முதல் இரவு 10:30 வரை zoom ஊடாக இடம்பெற்றது. சி. ஜெய்சங்கர், கலாநிதி ம, நதீரா, யதார்த்தன் ஆகியோர் ஆரம்ப உரைகளை நிகழ்த்தினார்கள். சத்தியதேவன் தொ. ப பற்றிய அறிமுகத்தை வழங்கி நிகழ்வைத் தொடக்கிவைத்ததுடன் தொடர்ந்து நிகழ்வை தொகுத்தும் வழங்கினார்.
தொடர்ந்து உரைகளையும் தொ. பரமசிவனின் எழுத்துச் செயற்பாடுகளையும் குறித்த கலந்துரையாடலும் இடம்பெற்றது. வரலாற்றுணர்வையும் பண்பாட்டு அரசியல் பற்றிய பிரக்ஞையும் உருவாக்கும்பொருட்டு விதை குழுமம் தொடர்ச்சியாக பண்பாட்டு ஆய்வுகள் குறித்த உரையாடல் நிகழ்வுகளை ஒருங்கிணைக்க இருப்பதாக விதை குழுமம் சார்பில் இந்நிகழ்வில் அறிவிக்கப்பட்டது. இனிவரும் நிகழ்வுகளில் பங்குபற்றுவோர் உரையாடுவதற்கு அதிக நேரத்தை ஒதுக்குவதாக உறுதியளிப்பதுடன் விதை குழுமத்தின் செயற்பாடுகளிலும் உரையாடல்களிலும் பங்கேற்குமாறு விதை குழுமம் தோழமையுடன் வேண்டிக்கொள்கின்றது.
மேற்படி நிகழ்வின் காணொலியை இத்துடன் இணைத்துக்கொள்கின்றோம்.