சுயமரியாதையும் சமத்துவமும் கொண்ட சமூகமொன்றினைக் கட்டியெழுப்புவதைத் தன் நோக்காகக் கொண்டு செயற்படும் விதை குழுமம் வரலாறு, சமூகவியல் குறித்த பிரக்ஞையினை மக்களிடம் ஏற்படுத்துவதை அதற்கான வழிகளில் ஒன்றாகக் கருதுகின்றது. இதன்பொருட்டு விதை குழுமம் ஒருங்கிணைப்பதாக அறிவித்திருந்த தொடர் உரையாடல்களின் முதலாவது நிகழ்வில் சமூகவியலாளரும் மானுடவியலாளருமான நியூட்டன் குணசிங்கவின் எழுத்துகள் குறித்தும் அவரது ஆய்வுகள் குவிநிலைகொண்ட பரப்புகள் குறித்தும் உரையாடல் இடம்பெறும். ச. சத்தியதேவன் அவர்கள் ஒருங்கிணைக்கும் இந்நிகழ்வில் சமூக விஞ்ஞான ஆய்வறிஞர் கந்தையா சண்முகலிங்கம் அவர்களின் உரையினைத் தொடர்ந்து பங்கேற்பவர்களுடனான கலந்துரையாடலும் இடம்பெறும்.
நாள் : ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 21, 2021
நேரம் : இலங்கை நேரம் இரவு 8 மணி
ரொரன்றோ நேரம் காலை 10:30
லண்டன் நேரம் மாலை 3:30
Zoom இணைப்பு : https://us02web.zoom.us/j/87687107127?pwd=TjA5Y0hyR1psa0wvdXBVc3BLYUx2QT09