vithaikulumam.com
கலந்துரையாடல்கள் செயற்பாடுகள்

வாசிப்பும் உரையாடலும் : நிகழ்வு 03

பாலிநகரில் இயங்கிவருகின்ற, விதை குழுமத்தின் நூலகத்தில் கடந்த பெப்ரவரி 28 அன்று ‘குட்டி இளவரசன்’ நாவல் மீதான வாசிப்பும் உரையாடலும் இடம்பெற்றது. இந்நூலகத்தில் நடைபெறும் ஒவ்வொரு நிகழ்வையும் ஒவ்வொருவர் வீட்டிலும் இயற்கை சார்ந்த இடங்களிலும் நடத்துவதாக நூலகத்தில் திட்டமிட்டிருந்தோம். அதன்படி இந்த உரையாடல் நூலக உறுப்பினர் ஒருவரின் வீட்டில் இடம்பெற்றது. நாவலில் விரும்பிய பகுதிகளை ஒவ்வொருவரும் வாசித்து காட்டியதைத் தொடர்ந்து வாசிப்பு என்றால் என்ன என்பது தொடர்பான உரையாடலும் இடம்பெற்றது. வாசிப்பு எப்படியான செயல், அதன் உள்ளடுக்குகள் எவை, மனம் எப்படி வார்த்தைகளை வாசிக்கிறது, கண்களால் வாசிப்பது எத்தகையது, ஒட்டுமொத்தமான வாசிப்பின் அடிப்படையில் பார்வை எப்படி உருவாக்குகிறது என்பதாக உரையாடல் இருந்தது. பின்னர் அவர்கள் விரும்பியபடியான ஓவியங்களை வரைந்தனர்.

தொன்ம யாத்திரை தொடர்பான அறிமுகம் கடந்த திரையிடலின்போது செய்யப்பட்டிருந்தது. அடுத்த தொன்ம யாத்திரை மல்லாவியின் நீர்நிலைப் பண்பாட்டின் மீதும் அங்குள்ள வரலாற்று இடங்களை அடையாளங்காணலுடனும் இடம்பெற இருக்கின்றது. அதற்கான கள ஆய்வினையும், வாய்மொழி வரலாற்றைத் திரட்டுவதிலும் இந்நூலகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் ஈடுபடுவது பற்றியும் அவர்கள் அந்தத் தகவல்களை எப்படிச் சேகரிப்பது, வரலாற்றை எழுதுவது எப்படி என்பதையும் பற்றி கலந்துரையாடப்பட்டது. உறுப்பினர்கள் இந்தச் செயற்பாட்டில் ஆர்வத்துடன் தற்போது ஈடுபட்டு வருகின்றனர். குடும்பங்களிலும் ஊரில் அறிந்தவர்களிடமும் வாய்மொழிமூலமான கதைகளைத் திரட்டுவதிலும் இலக்கிய ஆதாரங்களை அறிந்து சேகரிப்பதிலும் ஈடுபடுகிறார்கள்.

கலந்துரையாடலின் வழி அடுத்த உரையாடலைத் தீர்மானிப்பதென்றும், அடுத்தகட்ட நிகழ்வுகளை ஒழுங்கமைப்பதென்றும் முடிவானது.

தோழமையுடன்
விதை குழுமம்

Related posts

தொன்ம யாத்திரை 01 முன்கள ஆய்வு

vithai

துஷ்பிரயோகத்தின் சாட்சி -10- நவாலியூர் தாமா

vithai

“மரபுரிமையைக் காப்பதும் ஓர் அரசியற் செயற்பாடுதான்” – பா.அகிலன்

vithai

காட்டுப்புலம் ஒரு சமூக உரையாடல்- 4 பாலியல் வன்முறைகளுக்கெதிரான அமைப்புகளின் வகிபாகம் -2

vithai

தொன்ம யாத்திரை – 2 குருவிக்காடு – முன்கள ஆய்வு

vithai

சிறுவர் மீதான பாலியல் துஷ்பிரயோகம் குறித்த IBC உரையாடல்

vithai

Leave a Comment