vithaikulumam.com
அறிவித்தல்கள்

அஞ்சலி

திருமறைக் கலாமன்றத்தின் நிறுவுனரும் கலை, இலக்கியச் செயற்பாடுகள், பதிப்பு முயற்சிகள், கலைமுகம் என்கிற இதழ் வெளியீடு போன்ற பல்வேறு செயற்பாடுகளை ஐம்பதாண்டுகளுக்கு மேலாகத் தொடர்ச்சியாக முன்னெடுத்து வந்தவருமான மரியாதைக்குரிய மரியசேவியர் அடிகள் ஏப்ரல் 1, 2021 அன்று இயற்கையெய்தினார்.

ஒரு சமயச் செயற்பாட்டாளரான மரியசேவியர் அடிகள், இனங்களுக்கும் மதங்களுக்குமான நல்லிணக்கத்தை கலைகளின் ஊடாக உருவாக்கமுடியும் என்ற நம்பிக்கையுடன் தனது பயணத்தை மேற்கொண்டவர். கலை, இலக்கியம் சார்ந்த ஏராளமான நிகழ்வுகளுக்கான வெளியை உண்டாக்கித் தந்ததுடன் அவற்றை தொடர்ச்சியாக அடுத்த தலைமுறைகளுக்குக் கையளித்தவர். அவருடைய பங்கை இழந்து நிற்கும் இத் தருணத்திலும் இனிமேலுமே நம் சமூகம் அவரின் பெறுமதியை உணரும். ஒரு மையமாகவும் இணைப்பாகவும் இருந்த அவரின் பங்களிப்பு மதிக்கத்தக்கது.

விதை குழுமம் ஒருங்கிணைத்த பல்வேறு நிகழ்வுகளுக்குமான இடவசதியை மனமுவந்து வழங்கி எமது பயணத்துக்கு ஆதரவு வழங்கியவர். பல்வேறு இலக்கியம் மற்றும் கலைகளுக்கான பரிவர்த்தனை மையமாக திருமறைக்கலாமன்றத்தை உருவாக்கியமையாலும் இயக்கியமையாலும் பல சமூக உரையாடல்கள் நிகழ்வதற்கு வாய்ப்பை உண்டாக்கித் தந்தமையின் பின்னால் அவரின் பங்களிப்பும் உண்டு. கலைமுகம் இதழ் ஒரு மதச்சார்பற்ற, பிரதேச சார்பற்ற, இனச்சார்பற்ற ஒன்றாக இத்தனை காலமும் பயணித்தமை ஒரு முக்கியமான முன்னோடிப் பண்பு. அதன் வெளியை காத்தமையில் அவரின் பங்களிப்பும் முக்கியமானது. பல்வேறு நெருக்கடியான காலகட்டங்களிலும் மக்களை ஆற்றுப்படுத்தும் நிகழ்வுகளைத் தொடர்ந்து ஆற்றிய ஒரு செயற்பாட்டாளரின் இழப்பென்பது சமூகத்தின் இழப்பு. மரியசேவியர் அடிகளுக்கு குழுமத்தின் தோழமை நிறைந்த அஞ்சலிகள்.

தோழமையுடன்
விதை குழுமம்

ஓவியம் : ஆசை ராசையா

Related posts

அறிவிப்பு : அறிதலும் பகிர்தலும் 01

vithai

அறிதலும் பகிர்தலும் 03 – மக்ஜில்வ்ரேயின் எழுத்துகள்

vithai

Leave a Comment