vithaikulumam.com
அறிவித்தல்கள்

அறிதலும் பகிர்தலும் 03 – மக்ஜில்வ்ரேயின் எழுத்துகள்

அமெரிக்காவின் கொலரடோ பல்கலைக்கழகத்தின் மானிடவியல் பேராசிரியரான Dennis B McGilvray இலங்கையிலும் இந்தியாவிலும் உள்ள தமிழ் முஸ்லிம் சமூகங்களின் கட்டமைப்பு, சாதிமுறை, சமயம், சடங்குகள், பண்பாடு என்பன பற்றி இனவரையியல், மானிடவியல் ஆய்வுகளை எழுதி வெளியிட்டுள்ளார். இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் 1973 ஆம் ஆண்டில் இவர் கள ஆய்வினை நிகழ்த்தினார். 1974-78 காலத்திலும் 1993 இன் பின்னரும் பல தடவைகள் கள ஆய்வுக்காக மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களிற்கு மக்ஜில்வ்ரே வருகைதந்தார். இவரது முப்பதாண்டுகளுக்கு மேற்பட்ட ஆய்வுகளின் பயனான Crucible of Conflict என்ற பெரும்படைப்பு 2008 ஆம் ஆண்டில் வெளியாயிற்று. பல ஆய்வுக்கட்டுரைகளும் இவரால் நாற்பதாண்டுகளுக்கு மேற்பட்ட காலத்தில் வெளியிடப்பட்டுள்ளன. மேற்குறித்த நூல் கிழக்கிலங்கை மக்களின் சாதிக்கட்டமைப்பு, தாய்வழிக்குடிமுறை, சமயச் சடங்குகள், இனத்துவ அடையாளம், சமூக பொருளாதார வாழ்க்கை என்பனபற்றி விரிவாக ஆராய்வதாக அமைந்தது. இந்நூலின் மறுபதிப்பை 2011 ஆம் ஆண்டில் கொழும்பு SSA நிறுவனம் வெளியிட்டுள்ளது. இவரது படைப்பில் பின்வரும் படைப்புகள் முக்கியமானவை: Caste Ideology and Interaction (Ed), Tsunami Recovery in Sri Lanka: Ethnic and Regional Dimensions (Co. Ed), Symbolic Heat: Gender, Health and Worship Among the Tamils of South India and Sri Lanka, Rethinking Muslim Identity in Sri Lanka, A House for Every Daughter: Matrilocal Marriage in Sri Lanka and Beyond (In print) இறுதியாகக் குறிப்பிட்ட நூல் அச்சில் உள்ளது. இந்நூற் தலைப்பினை ”ஒவ்வொரு பெண்பிள்ளைக்கும் ஒரு சீதன வீடு : இலங்கையில் தாய்வழி வாழிடமும் திருமண முறையும்” என மொழிபெயர்த்துக்கொள்ளலாம்.

டெனிஸ் பி. மக்ஜில்வ்ரேயையும் அவரது சிந்தனைகளையும் அறிமுகம் செய்து உரையாடும் நோக்குடன் விதை குழுமம் அறிதலும் பகிர்தலும் – 3 நிகழ்வினை ஒருங்கிணைக்கின்றது. ச. சத்தியதேவன் அவர்கள் ஒருங்கிணைக்கும் இந்நிகழ்வில் சமூக விஞ்ஞான ஆய்வறிஞர் கந்தையா சண்முகலிங்கம் அவர்களின் உரையினைத் தொடர்ந்து பங்கேற்பவர்களுடனான கலந்துரையாடலும் இடம்பெறும்.
நாள் : ஞாயிற்றுக்கிழமை, மே 16, 2021
நேரம் : இலங்கை நேரம் இரவு 8 மணி
ரொரன்றோ நேரம் காலை 10:30
லண்டன் நேரம் மாலை 3:30
நிகழ்விற்கான Zoom இணைப்பு https://us02web.zoom.us/j/87048784183

Related posts

அஞ்சலி

vithai

அறிவிப்பு : அறிதலும் பகிர்தலும் 01

vithai

Leave a Comment