vithaikulumam.com
கலந்துரையாடல்கள் சமகாலகுறிப்புகள்

பெறுமதிமிக்க ‘Pride’ மாதம்

பாற்புதுமையினர் பற்றிய புரிதலை இப்போது நமது சமூகம் சிறிது சிறிதாக உள்வாங்கி வருகின்றது. அந்தவகையில் இந்த ஜூன் மாதமானது ”Pride month” என்று குறிக்கப்பட்டு அனைவருக்குமானதொரு சமத்துவ மாதமாயும், அனைவருக்குமான உரிமைகளுக்கு குரலெழுப்பும் – குரல் கொடுக்கும் மாதமாயும், சுயமரியாதை மற்றும் கண்ணியம் சார்ந்த மாதமாகவும் கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

‘கே பிரைட்’ (gay pride) என்பது 1970களில் உருவாக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. முக்கியமான ஸ்டோன்வால் எனும் கலவரத்தை இத்தினமானது நினைவுகூருகின்றது. 1969ஆம் ஆண்டிலிருந்து நியூயோர்க் நகரில் தற்பாலீர்ப்பு உரிமைகள் இயக்கத்தினுடைய போராட்டம் ஆரம்பமானதாகவும், காவற்துறையின் அடக்குமுறைக்கும் சட்ட அடக்குமுறைக்கும் எதிராக இப்போராட்டம் இடம்பெற்றதாகவும் கூறப்படுகின்றது.

பாற்புதுமையினருக்கான கொடியாக இப்போது வானவில் வர்ணக் கொடி பயன்பாட்டிலுள்ளது. முதலாவது வானவில் வர்ணக்கொடியானது 1978களில் தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது. இக் காலத்திற்கு முன்னர் இளஞ் சிவப்பு வர்ணத்திலான முக்கோணமொன்றையே அடையாளமாகப் பயன்படுத்தியிருந்தனர். ஆனால் இக்குறியீடானது ஏற்கனவே வேறொரு சம்பவத்துடன் தொடர்புபட்டிருந்தமையால் பொருத்தமற்றதாகக் கருதப்பட்டு, கில்பர்ட் பேக்கர் என்பவரே முதலாவது வானவில் வர்ணக் கொடியை வடிவமைத்ததாகக் கூறப்படுகின்றது. இது காலப்போக்கில் மெருகேற்றப்பட்டு இன்றுவரை பயன்பாட்டிலுள்ளது. ஆரம்பத்தில் இதில் எட்டு வர்ணங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன.

1. இளஞ்சிவப்பு – பால்

2. சிவப்பு – வாழ்க்கை

3. செம்மஞ்சள் – குணப்படுத்துதல்

4. மஞ்சள் – சூரிய ஒளி

5. பச்சை – இயற்கை

6. நீலப்பச்சை (டர்க்கைஸ்) – மஜிக் / மாயம்

7. நீலம் – அமைதி

8. ஊதா (வயலட்) – ஆவி

(மூலம் – இணையம்) என்கின்ற ரீதியில் இவை குறிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகின்றது. இன்றைய காலத்தில் ஆறு வர்ணங்களே பயன்படுத்தப்படுகின்றன.

காலத்தின் போக்கிலும் சமூகக் கட்டமைப்புக்களின் தாக்கத்திலும் பல்வேறு அழுத்தங்களையும், அடக்குமுறைகளையும் எதிர்கொண்ட இந்த பாற்புதுமையினர் சமூகமானது இன்று அழுத்தங்களுக்கு எதிராக கைகளை உயர்த்தவும், கேள்விகளைக்கேட்டுக் குரலெழுப்பவும் உரிமைகளைப் போராடிப் பெற்றுக்கொள்ளவும் தொடங்கியிருப்பதோடு பாற்புதுமையினர் பற்றியை தெளிவினையும் புரிதலையும் சமூகத்திற்கு வழங்குவதற்கான செயற்பாடுகளையும் நிறைவேற்றி வருகின்றது.

அடக்குமுறைக்கெதிரான தேவைகளில் இவர்கள் கல்வி பெறுவதன் அவசியமே மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகின்றது. கல்வியின் மூலமே சமூகத்தில் தமக்கான அங்கீகாரத்தை பெற்றுக்கொள்ளமுடியுமென்ற ரீதியில் பலர் சாதித்தும் உள்ளனர்.

அந்தவகையில் இந்த பெறுமதிமிக்க ‘பிரைட் மாதமானது’ தனியே பாற்புதுமையினருக்குமட்டுமல்லாது அனைத்து வகையான அடக்குமுறைகளுக்கெதிராகவும், சமநீதி கேட்கும் நம் எல்லோராலும் கடைப்பிடிக்க வேண்டியதொரு மாதமாகும்.

சமநீதி – சம தர்மம்!

-பிறைநிலா கிருஷ்ணராஜா-

Related posts

சிறுவர் மீதான பாலியல் துஷ்பிரயோகம் குறித்த IBC உரையாடல்

vithai

தொன்மயாத்திரை -5 தேவாலயங்களின் நகரம்

vithai

நடிக்கிறீர்களா அல்லது, இயல்பிலே நீங்கள் இப்படித்தானா?

vithai

துஷ்பிரயோகத்தின் சாட்சி 04

vithai

மூளாய் இராவணேசுவரர் குறித்து சில வார்த்தைகள்

vithai

தொ. பரமசிவன் : அறிதலும் பகிர்தலும் நிகழ்வின் காணொலி

vithai

Leave a Comment