vithaikulumam.com
அறிக்கைகள்

டொமினிக் ஜீவா என்றோர் ஆணிவேர்

மூத்த இதழியலாளர்களில் ஒருவரும், கலை இலக்கியச் சமூகச் செயற்பாடுகளை ஓயாது முன்னெடுத்தவரும் ஆளுமைமிக்க படைப்பாளிகளில் ஒருவருமான டொமினிக் ஜீவா அவர்கள் இயற்கையெய்தி இருப்பதுடன் ஈழத்தின் கலை இலக்கியச் செயற்பாடுகளின் ஆணிவேர் ஒன்றினை நாம் இழந்திருக்கின்றோம்.

1927 ஆம் ஆண்டு பிறந்த டொமினிக் ஜீவா தன் இளவயதில் இருந்து தான் எதிர்கொண்ட சமூக ஒடுக்குமுறைகளுக்கும் அன்று நிலவிய சமூக ஒடுக்குமுறைகளுக்கும் எதிராகப் போராடியதுடன் கலை இலக்கியச் செயற்பாடுகளின் ஊடாக ஒடுக்குமுறைக்கெதிராகப் போராடுவதை முன்னெடுத்தவர்களில் ஒருவர்.

70 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்த டொமினிக் ஜீவாவின் சமூக விடுதலைக்கான போராட்டம் அவரது மறைவுடன் நின்றுவிடப்போவதில்லை. அவர் கவனம் குறித்த விடயங்களையும் கவனத்திற்கொள்ளத் தவறிய விடயங்களையும் ஒன்றிணைத்தே அடுத்த தலைமுறையினர் பயணிக்கவேண்டும். ‘சரித்திரத்தில் எனது உழைப்பின் பெறுபேறு நிச்சயம் பதியப்படும்’ என்று டொமினிக் ஜீவா அடிக்கடி சொல்வதாகச் சொல்வார்கள். அவரது உழைப்புக்கான பெறுபேறு பதியப்படுவதே மக்கள் நலனுக்கும் பயனளிப்பதாகும். அவரது பயணத்தை நினைவில் நிறுத்தி சுயமரியாதைக்கும் சமத்துவக்குமான பாதையில் தொடர்ந்து பயணிப்போம்.

Related posts

நினைவுத் தூபி இடித்தழிப்பு : கண்டன அறிக்கை

vithai

இன்னும் கிடைக்காத சமூகநீதி

vithai

குட்மோர்னிங் டீச்சர்

vithai

பெரியபரந்தன் பிள்ளையாரும் சமூக நீதியும்

vithai

வாய்ப்பாட்டு மட்டை

vithai

எங்கடை ’சாவுக்கொரு சாட்டு வேணும்’ அவ்வளவுதான் !

vithai

Leave a Comment