vithaikulumam.com
சமகாலகுறிப்புகள்

செயற்பாட்டுத்தளங்களில் நிகழக்கூடிய பாலியல் சுரண்டல்கள் குறித்த நிலைப்பாடு

புதிய ஜனநாயக மார்க்சிச லெனினிசக் கட்சியின் உறுப்பினர் மு. மயூரன் மீது கட்சியின் கோட்பாடு, கொள்கை, நடைமுறை ஆகியவற்றுக்கு முரணான வழிகளில் பெண்களுடன் முறைகேடாக நடந்துகொண்டார் என்று சுமத்தப்பட்ட குற்றச்சாற்றுகளின் அடிப்படையில் நடந்த விசாரணைகளில் அவர் அளித்த விளக்கங்கள் திருப்திகரமாகவும் நம்பகத்தன்மை கொண்டவையாகவும் அமையவில்லை என்பதன் அடிப்படையில் அவரை கட்சியின் உறுப்புரிமையிலிருந்தும் வெகுசன அமைப்புகளிலிருந்தும் தற்காலிகமாக இடைநிறுத்தி வைப்பதாக கட்சி உத்தியோகபூர்வமாக அறிவித்திருக்கின்றது. கட்சியின் முக்கிய உறுப்பினர் ஒருவர் மீது சுமத்தப்பட்ட இத்தகைய குற்றச்சாற்றுகளை விசாரித்து நடவடிக்கை எடுத்திருக்கும் புதிய ஜனநாயக மார்க்சிச லெனினிசக் கட்சியின் இந்தச் செயலுக்கு விதை குழுமம் தனது பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்வதுடன் அறிக்கையின் அடிப்படையில் மு. மயூரனுக்குக் கடும் கண்டனங்களையும் தெரிவித்துக்கொள்கின்றது.

சமூக நீதிக்காகவும் ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் போராடுகின்ற அமைப்புகளும் தனிநபர்களும் அந்தப் போராட்டத்தினை தம்மில் இருந்து ஆரம்பிக்கவேண்டும். சமூக ஒடுக்குமுறைகளும் சுரண்டல்களும் தொழிற்படக்கூடிய விதங்களை ஆராய்ந்து அவை குறித்த பிரக்ஞையுடன் அமைப்புகள் இயங்குவதும் அமைப்பின் உறுப்பினர்களும் அந்தப் பிரக்ஞையை அடைவதற்கான முனைப்புகளை அமைப்புகள் முன்னெடுப்பதும் அவசியமானது. அத்துடன் பாதிக்கப்பட்டவர்கள் நீதிவேண்டும்போது அமைப்புகள் அந்தக் குரல்களை ஒடுக்கிவிடாமல் அறத்தின் பக்கம் நின்று தொழிற்படுவதும் முக்கியமானது. சமூக மாற்றத்திற்காகவும் பொதுவெளியில் செயற்படவும் வருகின்ற பெண்கள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் சுரண்டல்களும் பாலியல் தாக்குதல்களும் அவதூறுகளும் நீண்டநாட்களாகவே தொடர்ந்துவருபவை. இவை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு முக்கியத்துவம் கொடுப்பதுடன் இவற்றுக்கெதிரான காத்திரமான வேலைத்திட்டங்களையும் உருவாக்குவது அவசியமாகும்.

பாலியல் கல்வி வழங்கப்படாத, பாலியல் குறித்த பிரக்ஞை பரவலாக உருவாக்கப்படாத சமூகத்தில் பாலியல் சுதந்திரம் என்பது சுரண்டலுக்கான கருவியாக பாவிக்கப்படக்கூடும் என்பதுடன் பாலியல் சுரண்டல் என்பதையும் ஒரு பாலியல் குற்றம் என்றே கருதவேண்டும் என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்தவேண்டியிருக்கின்றது. பாலியல் பற்றிய பிரக்ஞையை உருவாக்குவதற்கும் பாலியல் குற்றங்களுக்கு எதிராகப் போராடவேண்டியதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் சமூக மாற்றத்திற்காகச் செயற்படும் அனைவரும் ஒன்றிணையவேண்டும் என்று விதை குழுமம் தோழமையுடன் கேட்டுக்கொள்கின்றது.

தோழமையுடன்
விதை குழுமம்

Related posts

பெறுமதிமிக்க ‘Pride’ மாதம்

vithai

ஈழத்தில் பரவும் இந்திய ஆதிக்கம்

vithai

பாற்புதுமையினர் பற்றிய அறிதலும் சமூக ஏற்பிற்கான பயணமும்

vithai

சிறுவர் துஷ்பிரயோகங்கள் பற்றிய சினிமாக்கள்

vithai

சுயமரியாதை மாதம் 2021: Pride with a Purpose

vithai

மெய்நிகர் வெளியில் பாலியல் வசைகள்

vithai

Leave a Comment