குடத்தனை, விளாங்காட்டில் இயங்கிவரும் ‘சிட்டுக் குருவிகள்’ புத்தகக் குடிலில் வாசிப்பு மாதத்தை முன்னிட்டு கடந்த சனிக்கிழமை (16.10.2021) கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது. கொவிட் பெருந்தொற்றுக் காரணமாக ஆரம்ப கட்ட முயற்சிகளுடனும் செயற்பாடுகளுடனும் மட்டுப்பட்ட பங்குபற்றல்களுடன் இருந்து வந்த புத்தகக் குடிலின் செயற்பாடுகளை மீண்டும் தொடங்குவதற்கு வாசிப்பு மாதத்தின் பின்னணியில் இவ் உரையாடல் ஒரு மீள் தொடக்க நிகழ்வு.
குறித்த நிகழ்வில் சிட்டுக்குருவிகள் புத்தகக் குடிலின் அங்கத்தவர்களான சிறுவர்களும் பெற்றோரும் விதை குழுமத்தின் செயற்பாட்டாளர்களும் கலந்து கொண்டனர். வாசிப்பு மாதம் பற்றிய அறிமுக உரையாடலின் ஆரம்ப உரை விதைகுழும செயற்பாட்டாளர் யதார்த்தனால் முன் வைக்கப்பட்டது. வாசிப்புப் பழக்கம் பற்றிய தன்னுடைய அனுபவங்களை வாசகரும் ஆய்வாளருமான ச. சத்தியதேவன் அவர்கள் பகிர்ந்துகொண்டார்.
பிள்ளைகளுடனும் பெற்றோருடனும் தொடர்ச்சியான முன்னெடுப்புகள் பற்றிக் கலந்துரையாடினோம். தொடர்ந்து சிட்டுக்குருவிகள் புத்தகக் குடிலின் செயலாளர் செல்வி விஜிதாவின் பகிர்வுடன் நிகழ்வு நிறைவடைந்தது. தொடர்ச்சியான செயற்பாடுகளும் புத்தகங்கள் ஊடான சமூக அறிவுப் பரிமாற்றத்தையும் முன் கொண்டு செல்ல வேண்டுமென்ற நம்பிக்கையையும் உந்துதலையும் இந் நிகழ்வு ஏற்படுத்தியது.
தோழமையுடன்
விதை குழுமம்